கொரோனா அச்சம்: டாய்லெட் பேப்பருடன் தங்கத்தையும் வாங்கிக் குவிக்கும் சுவிஸ் மக்கள்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

கொரோனா அச்சத்தால் மக்கள் டாய்லெட் பேப்பர்களை வாங்கிக் குவிப்பதை வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம்.

ஆனால், சுவிட்சர்லாந்தில் சிலர் தங்கத்தையும் வாங்கிக் குவிக்கிறார்களாம். சூரிச்சில் தங்க வியாபாரம் செய்யும் நிறுவனம் ஒன்றின் முன் மக்கள் வரிசையில் நிற்பதை காண முடிகிறது என சுவிஸ் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

சூரிச்சில் டாய்லெட் பேப்பர்கள், மாவு, பால் மற்றும் முட்டை ஆகியவை கடைகளில் வேகமாக விற்றுத்தீரும் நிலையில், பிரபல தங்க வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் தங்கம் வாங்க மக்கள் குவிகின்றனராம்.

அந்த தங்க வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் சமீப காலமாக டிமாண்ட் அதிகரித்துள்ளது என்று கூறுகிறார் அதன் தலைமை செயல் அலுவலர்.

Degussa என்ற அந்த நிறுவனத்துக்குள் 10 பேர்தான் செல்லமுடியும். ஆகவே, கடையின் முன் பாம்பு போல் நீளமாக வளைந்து நெளிந்து மக்கள் நிற்கிறார்களாம்.

சராசரியாக மக்கள் 5,400 டொலர்களுக்கு தங்கம் வாங்கி சேமிக்கிறார்களாம். அவர்கள் லாபம் பார்ப்பதற்காக நகை வாங்கும் speculatorகளும் இல்லையாம்.

ஒரு வேளை பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால், அதிலிருந்து தங்கள் குடும்பங்களை பாதுகாப்பதற்காக தங்கம் வாங்கும் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தானாம் அவர்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்