நம்மிடம் போதுமான உணவுப்பொருட்கள் இருக்கின்றன... கொரோனாவால் பதற்றம் வேண்டாம்: சுவிஸ் அதிகாரிகள்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் போதுமான உணவுப்பொருட்கள் கையிருப்பில் இருப்பதால் மக்கள் பதற்றப்படவேண்டாம் என சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள சூழலை சமாளிக்கும் வகையில், நான்கு மாதங்களுக்கான உணவுப்பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசிய பொருளாதார வழங்கல் துறை அதிகாரியான Werner Meier, உணவுப்பொருட்கள் குறித்து பதற்றம் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்து மனிதர்களுக்குத்தான் எல்லையை மூடியுள்ளது, பொருட்களுக்கு அல்ல என்று கூறிய Meier, இதுவரை எந்த பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் இல்லை என்றார்.

அதேபோல், எந்த அத்தியாவசிய பொருளையும் உற்பத்தி செய்வது தொடர்பான எந்த உத்தரவுகளையும் நாம் இதுவரை பிறப்பிக்கவில்லை என்றும் கூறியுள்ளார் அவர்.

அதே நேரத்தில், சில வலி நிவாரணிகள் மற்றும் காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகள் இனி குறிப்பிட்ட அளவில்தான் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் மருந்துகள் மீதான இந்த கட்டுப்பாடுகள், அடுத்த ஆறு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், மருந்துகள் கையிருப்பு குறைவாக இருப்பதால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகளின்படி, பாராசிட்டமால் மற்றும் ibuprofen முதலான சில குறிப்பிட்ட மருந்துகள், ஒருவருக்கு நாளொன்றிற்கு ஒரு பாக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்