கொரோனா வைரஸ் பீதி... சுவிஸில் பிறந்த சிசுக்களை காண தந்தையர்களுக்கு அனுமதி மறுப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுவிட்சர்லாந்தில் பிறந்த சிசுக்களை காண மருத்துவமனைகள் தந்தையர்களுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூரிச் பகுதியில் பிரசவத்திற்கு முன்னர் மேற்கொள்ளும் பரிசோதனைகளின்போது பெண் ஒருவர் இருமியதாக கூறப்படுகிறது.

அவர் தொடர்பான இறுதி அறிக்கை வெளிவரவில்லை என்றபோதும், அவரையும் கொரோனா பதிப்புக்கு உள்ளானவர் என்றே கணக்கில் வைத்திருந்ததாக குறித்த மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் இறுதியில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனவும், தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், சுவிட்சர்லாந்தில் கர்ப்பிணி பெண்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்காகியுள்ளது உள்ளூர் நாளேடுகளில் செய்தியாக வந்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்புக்கு உள்ளான தாயாரையும் சிசுவையும் பிரிக்க வேண்டாம் என சுவிஸ் மருத்துவ நிபுணர்கள் கோரியுள்ளனர்.

பெரும்பாலான சுவிஸ் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் காரணமாக தந்தையர்கள் பிரசவத்தின்போது மட்டுமே உடனிருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

சிசு பிறந்ததும் தந்தையர்களை உடனடியாக தங்கள் குடியிருப்புக்கு திருப்பி அனுப்புகின்றனர். சில மருத்துவமனைகளில் பிறந்த சிசுவுடன் நேரத்தை செலவிட தந்தையர்களுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தும், Bülach மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் தாயார் ஒருவர், கட்டுப்பாடுகளை மீறி, தமது பாட்டியாருக்கு பிள்ளையை காண்பிக்க மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்