இந்த நிலை எப்போது முடிவுக்கு வரும்: கொரோனாவால் மகனுடன் பரிதவிக்கும் சுவிஸ் தாயார்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பெரும்பாலான வணிக வளாகங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர் சுவிஸ் மக்கள்.

சுவிட்சர்லாந்தில் குடியிருக்கும் நெர்கிஸ் என்பவர் தமது இக்கட்டான நிலையை வெளியிட்டுள்ளார். 13 வயது மகனுடன் தனித்து வாழ்ந்துவரும் அவர் Dosenbach-ல் மணிநேர ஊதியத்தில் வேலை செய்து வருகிறார்.

தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த கடையானது மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமது நிதி பற்றாக்குறை தொடர்பில் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

தமக்கிருக்கும் சிறிய ஊதியத்தை நம்பியே தாமும் மகனும் இருப்பதாக கூறும் அவர், குடியிருப்புக்கு வாடகை செலுத்தவும் முடியாத சூழல் உள்ளது என்கிறார்.

மட்டுமின்றி மார்ச் மாத ஊதியம் இன்னும் தமக்கு அளிக்கப்படவில்லை எனவும் கூறும் நெர்கிஸ், இந்த கடினமான நிலை விரைவில் முடிவுக்கு வரும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

45 வயதான நெர்கிஸ் போன்று சுவிட்சர்லாந்தில் பலரும் பரிதவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே இந்த நெருக்கடியான சூழலில் வாடகை செலுத்தமுடியாத வாடகைதாரர்களை அல்லது சிறு தொழில் முனைவோர்களை வெளியேற்றக் கூடாது என பொதுச்செயலாளர் Natalie Imboden தெரிவித்துள்ளார்.

இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பெடரல் அரசாங்கம் மொத்தம் 40 பில்லியன் பிராங்குகளை இதுவரை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்