சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கை வந்த போதகருக்கு கொரோனா உறுதி! வெளியான அறிக்கை

Report Print Santhan in சுவிற்சர்லாந்து

இலங்கைக்கு வருகை தந்திருந்த மதபோதகருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் சுவிட்சர்லாந்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் சுவிட்சர்லாந்தில், 5,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 56 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் இந்த நோயின் பாதிப்பு தீவிரமாகலாம் என்பதால் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த தலைமை மதபோதகரால் கடந்த 15-ஆம் திகதி இலங்கையின், யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்திருக்கும் பில்தெனியா தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் சுவிஸ் நாட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதே வேளை குறித்த ஆராதனையில் கலந்து கொண்ட இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டு மருத்துவ அறிக்கைகளுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்