சுவிட்சர்லாந்தில் கொரோனாவுக்கான சோதனை கருவிகள் பற்றாக்குறை! எச்சரிக்கும் அதிகாரிகள்

Report Print Santhan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கொரோனாவுக்கான சோதனை கருவிகள் மற்றும் தீவிர சிகிச்சை படுக்கைகளின் பற்றாக்குறையை நாடு எதிர்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக சுவிட்சர்லாந்தில், தற்போது வரை 6,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, மக்கள் வீட்டிற்குள்ளே இருக்கும் படியும், அவசியமற்ற பயணங்களை தவிர்க்கும் படியும் அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸிற்கான சோதனைகளின் பற்றாக்குறையை நாடு எதிர்கொள்வதாக அந்நாட்டு அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை எச்சரித்துள்ளனர்.

மேலும் தெற்கு டிசினோ பிராந்தியத்தில் தீவிர சிகிச்சை பிரிவுகள் (ICU) நிரம்பி வழிவதாக தெரிவித்துள்ளனர்.

கொடிய நோய்க்கான அதன் சோதனையை அதிகரிக்க நாடு முயற்சித்து வருகிறது. ஆனால் சுவிஸ் பொது சுகாதார அலுவலகத்தின் மருத்துவர் Daniel Koch, சப்ளை முடிந்துவிட்டதாக எச்சரித்தார்.

சமீபத்திய நாட்களில் சோதனைகளின் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது. இது சுவிட்சர்லாந்தின் சோதனை விநியோகத்தை வரம்பிற்குள் தள்ளியுள்ளது.

இதனால் மிக மோசமான நிகழ்வுகளுக்கான சோதனைகளை முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இப்போது உள்ளதாக குறிப்பிட்டார்.

சுவிட்சர்லாந்து கொரோன வைரஸ் காரணமாக அதிக சோதனைகள் தேவைப்படுகின்றன. ஆனால் இது கடினமாக உள்ளது. ஏனெனில் முழு உலகமும் தற்போது இதற்கான சோதனைகள் நடத்தப்பட்டு வருவதுடன், தேடப்பட்டும் வருவதாக தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் Ticino அதிக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை கொண்டுள்ளது. 100,000 குடியிருப்பாளர்களில் கிட்டத்தட்ட 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு...

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...