பரவும் கொரோனா: அரசு மருத்துவமனைகளுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ள தனியார் மருத்துவமனைகள்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில், கொரோனாவுடன் போராடும் அரசு மருத்துவமனைகளுக்கு உதவ தனியார் மருத்துவமனைகள் முன்வந்துள்ளன.

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், சுவிஸ் தனியார் மருத்துவமனைகள், தங்கள் பணியாளர்கள், நோயாளிகள் தங்கும் அறைகள் மற்றும் உபகரணங்களை அரசு மருத்துவமனைகளுடன் பகிர்ந்துகொள்ள முன்வந்துள்ளன.

அரசு மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்து திணறிக்கொண்டிருக்கும் நிலையில், தனியார் மருத்துவமனைகள் சரியான நேரத்தில் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு படியாக, அனைத்து மருத்துவமனைகளும் அவசர தேவை இருந்தாலன்றி சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டாம் என்ற அறிவிப்பை சுவிஸ் பெடரல் கவுன்சில் மார்ச் மாதம் 13ஆம் திகதி வெளியிட்டிருந்தது.

ஆகவே, சுவிஸ் தனியார் மருத்துவமனைகளின் நடவடிக்கைகள் அப்போதிலிருந்தே குறைவாகவே இருந்தன.

இந்நிலையில், அவை தற்போது பெருகி வரும் கொரோனா நோயாளிகளுக்கு தங்கள் சேவையை வழங்குவது என முடிவு செய்துள்ளன.

ஏற்கனவே அனைத்து மாகாணங்களும், வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த உதவுமாறு தனியார் மருத்துவமனைகளைக் கேட்டுக்கொண்டிருந்தன.

Vaudஇலுள்ள ஒரு மருத்துவமனை, பொதுவாக அது முடக்கியல், இதய மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை, கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளிகளுக்கென தனியாக ஒரு தளத்தையும் லிப்ட் ஒன்றையும் ஒதுக்கியுள்ளது.

கடந்த வெள்ளியன்று மாலை, முதல் கொரோனா நோயாளி அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைக்கு 14 அறைகள் அந்த தளத்தில் உள்ளன என்று கூறும் மருத்துவ ஒருங்கிணைப்பாளரான Philippe Glasson, மற்ற தளங்களிலுள்ள சில அறைகளையும் ஒதுக்கி 30 நோயாளிகள் வரை கூட அனுமதிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய தயார் என்று தெரிவித்துள்ளார்.

அந்த மருத்துவமனையைப்போலவே, சுவிட்சர்லாந்தின் பல தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளை ஏற்றுக்கொள்வதற்கு முன்வந்துள்ளன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...