மனைவிக்கு கொரோனா பாதிப்பு... எங்களுக்கு தயவு செய்து உதவுங்கள்: சுவிட்சர்லாந்தில் கதறும் கணவன்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் சிரியா பெண்மணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரை காப்பாற்றக் கோரி அவரது கணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சூரிச் பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் சிரியா நாட்டவரான பெண்மணி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிக வசதிகள் ஏதுமற்ற முகாம் என்பதால் அவர் மற்ற புகலிடம் கோருவோருடன் நெருக்கமாக வாழ்ந்து வருகிறார் என தெரியவந்துள்ளது.

தற்போது அங்குள்ள நிலைமை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குறித்த பெண்மணியை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த முடியாத சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் அங்குள்ள கழிவறை ஒன்றை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு என மட்டுமாக ஒதுக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் அவரது கணவர் தெரிவிக்கையில், ஏற்கெனவே வாத நோயால் மிகவும் பாதிக்கப்பட்டவர் அவர், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பும்.

உதவிக்கு எங்களுக்கு வேறு யாரும் இல்லை, தயவு செய்து எனது மனைவியை காப்பாற்றுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது அவரை, அவரது அறையில் மட்டுமே தங்கியிருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மற்றும் அவருடன் எவரையும் பழகவும் அனுமதிக்கப்படவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் ஒரு மருத்துவர் அவரை பரிசோதித்து மாதிரிகள் எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த முகாமில் உள்ள எஞ்சியவர்கள் கொரோனா பரவல் தொடர்பில் தங்கள் அச்சத்தை வெளியிட்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்