சுவிட்சர்லாந்தில் மக்களுக்காக கொரோனா ஓட்டல்! தனி அறையுடன் சகலவசதிகள்: விலை எவ்வளவு தெரியுமா?

Report Print Santhan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் சொகுசு ஓட்டல் ஒன்று கொரோனாவை மையப்படுத்தி, தானியங்கி வசதிகளுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட அறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

கொரோனாவிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாமல் இருக்க தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவதே சிறந்த தீர்வு என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

இதனை சரியாக வாய்ப்பாக கருதி சுவிட்சர்லாந்தில் உள்ள Le Bijou என்னும் சொகுசு ஓட்டல், தானியங்கி மயமாக்கப்பட்ட, அதாவது, கொரோனா பரிசோதனை, மருத்துவர்கள் மற்றும் 24 மணி நேர செவிலியர்கள் கண்காணிப்புடன் கூடிய புதிய பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.

தனி சமையலறை, உடற்பயிற்சி கூடம், மசாஜ் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மனிதர்களின் உதவியின்றி சொகுசு ஓட்டலின் பிரத்யேக ஆப் முலம் பெற்றுகொள்ளலாம்.

கொரோனா பரிசோதனை உள்ளிட்டவற்றுடன் 14 நாட்கள் வரை தங்குவதற்கு 6000 டொலர் முதல் 77,500 டொலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Le Bijou

இது குறித்து ஓட்டலின் CEO-வான அலெக்ஸாண்டர் ஹப்னர், கொரோனா பாதிப்பில் இருந்து விலகியிருக்க, சொகுசு அறைகள் வேண்டுமென சில வாடிக்கையாளர்களிடம் இருந்து அழைப்பு வந்தது.

இதனால், விருந்தினர்களை ஈர்க்க தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் குறித்து விளம்பரப்படுத்தினோம். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு இரண்டு விசாரணை மட்டுமே வந்தது.

Le Bijou

அதன் பின், நான்கு, ஐந்து, ஆறு என அதிகரித்துள்ளது. ஒருநாள் இரவு கூட தங்கலாம் என்றாலும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இரு வாரங்கள் மற்றும் இரண்டு மாதங்களை வரை தேர்வு செய்வதாகவும், ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியானவர்கள் ஓட்டலில் அனுமதிக்கப்படமாட்டார்கள் .லேசான அறிகுறியுடன் இருப்பவர்கள் தங்க அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.

Le Bijou

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...