கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் வரிசையில் சுவிட்சர்லாந்து! உயரும் என எச்சரிக்கை

Report Print Santhan in சுவிற்சர்லாந்து
1011Shares

கொரோனா வைரஸால் 10,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் வரிசையில் சுவிட்சர்லாந்து தற்போது ஐந்தாவது நாடாக மாறியுள்ளது..

சீனாவின் வுஹானில் பரவிய இந்த கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை உலுக்கி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில், 80,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 8,215 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதே போன்று ஸ்பெயின், ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு தீவிரமாகி வருகிறது.

இந்நிலையில், தற்போது இந்த நாடுகளின் வரிசையில் சுவிட்சர்லாந்தும் இணைந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸால் பாதிக்கபப்ட்டவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ தாண்டியுள்ளது.

Dailymail

இது குறித்து நேற்று சுகாதார துறை அமைச்சகம் தெரிவிக்கையில், 10,714 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்று எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக, வைரஸ் பரவலை தடுப்பதற்காக சுவிஸ் அரசு மக்கள் எந்த இடத்தில் அதிகம் கூடுகின்றனர் என்பதை டிராக் செய்வதற்காக, மொபைல் டிராக் என்ற கண்காணிக்கும் திட்டத்தை துவங்கியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸால் இறந்தவர்களில் சுமார் ஐந்தில் இரண்டு பங்கு Ticino-வில் நிகழ்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் திகதி தான் சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அப்போதில் இருந்தே, கொரோனாவுக்கு 400 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, அவற்றில் 14 சதவீதம் நேர்மறையானவை என்று பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேர்மறை சோதனை செய்பவர்களின் வயது ஒன்று முதல் 102 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் சராசரி வயது 52 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல், ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களின் அனைத்து கூட்டங்களையும் தடை செய்த சுவிஸ் அரசு, அதே நேரத்தில் மற்றவர்களுக்கு இடையில் இரண்டு மீற்றருக்குள் நிற்கும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்பெயினில் 57,786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,365 பேர் உயிரிழந்துள்ளனர். ஜேர்மனியில் 43,938 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 267 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் 29,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,696 பேர் உயிரிழந்துள்ளனர், இந்த நாடுகளின் வரிசையில் தற்போது சுவிட்சர்லாந்து(10,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு) ஐந்தாவதாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்