கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து சுயமாக சோதனை செய்த சுவிஸ் நிபுணர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
1121Shares

கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் எகிறும் நிலையில் சுவிஸ் நோயெதிர்ப்பு நிபுணர் ஒருவர், அதற்கான தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்து சுயமாக சோதனையிலும் ஈடுபட்டுள்ளார்.

கொரோனாவுக்கு உலகமெங்கும் இதுவரை பல ஆயிர மக்கள் மரணமடைந்துள்ளனர். நாளுக்கும் மரண எண்ணிக்கை எகிறி வருகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பல லட்சம் கடந்துள்ளது. இதுவரை தடுப்பு மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில் சுவிஸ் நோயெதிர்ப்பு நிபுணர் Peter Burkhard தமது ஆய்வகத்தில் கொரோனா தொடர்பில் தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்கி அதை சுயமாகவே சோதனையும் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் பாஸல் பகுதியை சேர்ந்த Peter Burkhard தமக்கு சொந்தமான ஆய்வகத்தில் இந்த மருந்தை உருவாக்கியுள்ளார்.

அந்த மருந்தில் 20 மைக்ரோகிராம் அளவுக்கு தமது காலில் செலுத்தி அவர் முதல் சோதனையை மேற்கொண்டுள்ளதாக உள்ளூர் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

குறிந்த மருந்தை மிருகங்களிடம் சோதனைக்கு உட்படுத்தவில்லை என்பது மட்டுமின்றி, அது நச்சுத்தன்மை கொண்டதா என்பது தொடர்பான சோதனைகளும் நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது.

மனிதர்களில் அந்த மருந்தானது நோயெதிர்ப்பு திறனை ஊக்குவிக்கும் என Peter Burkhard தெரிவித்துள்ளார்.

குறித்த மருந்தானது வேலை செய்தால், அது உண்மையில் விவரிக்க முடியாததாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்