கொரோனாவால் குடியிருப்பில் இருந்து வெளியே துரத்தப்பட்டேன்: சுவிஸ் மருத்துவரின் பரிதாப நிலை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்களை உலகமே பாராட்டி ஆதரித்துவரும் நிலையில், சுவிட்சர்லாந்தில் ஒரு மருத்துவர் அவரது குடியிருப்பில் நின்று வெளியேற்றப்பட்டுள்ளார்.

சூரிச் பிராந்திய மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றும் குறித்த 29 வயது இளம் பெண்ணுக்கே இந்த பரிதாப நிலை.

உலகின் பல நாடுகளைப் போன்று சுவிட்சர்லாந்தில் கொரோனா பரவலை அடுத்து குறித்த மருத்துவரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.

இதுவே, அவரது இரு சக அறைத் தோழர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, குறித்த மருத்துவரை கிண்டலும் கேலியும் செய்து இறுதியில் குடியிருப்பில் இருந்தே வெளியேற்றியுள்ளனர்.

கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவருடன் எப்படி ஒன்றாக குடியிருக்க முடியும் என்ற கேள்வியும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

கடந்த வாரம் அவசர தேவை ஒன்றால் வெளியே செல்ல திட்டமிட்ட மருத்துவரை அவரது அறைத் தோழர்கள் வெளியேற அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

பின்னர் பொலிசாரின் உதவியுடனே குடியிருப்பில் இருங்து வெளியேறும் நிலை ஏற்பட்டது என்கிறார் அந்த மருத்துவர்.

இந்த சூழலில் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட மருத்துவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்