சுவிஸில் இளம் பெண்களிடம் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட வாடகை டாக்ஸி சாரதி: நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பெண் வாடிக்கையாளர்களை மிரட்டி துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட எச்.ஐ.வி. பாதித்த டாக்சி சாரதியின் தண்டனையை பெடரல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

லூசர்ன் மண்டலத்தில் கடந்த 2010 முதல் 2016 வரையான காலகட்டத்தில் இளம் பெண்களை மிரட்டி இவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்.

மாணவி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், வாடிக்கையாளர்களான ஐந்து இளம் பெண்களை மிரட்டி துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் இவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பில் லூசர்ன் நீதிமன்றம் அளித்த 6 ஆண்டு கால சிறை தண்டனையை திங்களன்று பெடரல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இவர் தமக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதை மறைத்து பல ஆண்டுகள் தமது மனைவியுடன் பாதுகாப்பற்ற உறவு வைத்துக் கொண்டுள்ளதும் நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்துள்ளது.

டாக்சி சாரதியான தமது கணவருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தமக்கு தெரியாது என அவர் விசாரணை அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.

தம்மால் இளம் பெண் வாடிக்கையாளர் ஒருவரும் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என குற்றவாளியான டாக்சி சாரதி ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்