குழந்தைகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்தியுள்ள சுவிட்சர்லாந்து!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

கொரோனா அச்சுறுத்தலால் பெரும்பாலான உலக நாடுகள் இன்னமும் சமூக விலகலைக் கடைப்பிடித்துவரும் நிலையில், சுவிட்சர்லாந்து குழந்தைகளுக்கு சில கட்டுப்பாடுகளை நெகிழ்த்தத் திட்டமிட்டுள்ளது.

அதன்படி இனி குழந்தைகள் கடுமையான சமூக விலகலைக் கடைப்பிடிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்கள் தங்கள் தாத்தா பாட்டிகளை கட்டியணைத்துக்கொள்ளலாம். இந்த சலுகை முதியவர்களின் மன நலனுக்கு நன்மை விளைவிக்கும் என்றாலும், அதில் கொஞ்சம் அபாயமும் உள்ளது.

ஏனென்றால், கொரோனாவால் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என கருதப்படும் சிறுவர்கள், பெரியவர்களைப்போலவே மற்றவர்களுக்கு கொரோனாவைப் பரப்பக்கூடுமா என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

இந்த மாதம் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று, மற்றும் நாட்டின் சுகாதார நிபுணர்களுடனான கலந்தாலோசனைகளுக்குப்பின் பேசிய சுவிஸ் தொற்றுநோய்த்துறை தலைவரான Daniel Koch, சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாவதும் இல்லை, வைரஸை பரப்புவதும் இல்லை என்றார்.

அத்துடன் சுவிஸ் சுகாதார அலுவலகமும், 10 வயதுக்கு கீழுள்ள சிறுவர்கள் அபூர்வமாகவே கொரோனா தொற்றுக்கு ஆளாவதாகவும், அப்படியே ஆனாலும் அவர்களுக்கு சிறிய அளவிலேயே அறிகுறிகள் தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் பெரிய அளவில் நோய்களைப் பரப்புவதில்லை, சொல்லப்போனால், அவர்கள்தான் பெரியவர்களிடமிருந்து நோய்த்தொற்றைப் பெறுகிறார்கள்.

இருந்தாலும், அமெரிக்க நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், எளிதில் நோய்த்தொற்றக்கூடிய அபாயத்திலிருக்கும் முதியவர்களுக்கும், ஏற்கனவே தீவிர சுகாதாரப் பிரச்சினை உடையவர்களுக்கும் சிறுவர்களால் வைரஸை பரப்ப இயலும் என்று தெரிவித்துள்ளன.

வேறு சில ஆய்வுகளும் இதை ஆமோதிக்கின்றன. அதே நேரத்தில், சுகாதாரத்துறை மற்று தொற்றுநோய் நிபுணர்கள் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் பல, பெரியவர்களைவிட சிறுவர்கள் குறைந்த அளவே வைரஸை பரப்புவதாக தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்