பைத்தியக்காரர்கள் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவார்கள்: சுவிட்சர்லாந்து அரசியல்வாதி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயன்று வரும் நிலையில் சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் யோசனையை நிராகரித்துள்ளது.

இதற்கிடையில், சுவிஸ் அரசியல்வாதி ஒருவர் பைத்தியக்காரர்கள் மட்டுமே இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவார்கள் என விமர்சனம் செய்துள்ள செய்தி வெளியாகி ஐரோப்பிய ஒன்றியத்தை அவமானமடையச் செய்துள்ளது.

2016ஆம் ஆண்டு, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதை ஆதரித்து வாக்களிப்பதற்கு ஒரு வாரம் முன்புதான், சுவிஸ் அரசியல்வாதிகள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான விண்ணப்பத்தை வாபஸ் வாங்குவதை ஆதரித்து வாக்களித்தார்கள்.

அப்போது, Schaffhausen மாகாண கவுன்சிலரான Thomas Minder, பைத்தியக்காரர்கள் சிலர் வேண்டுமானால் இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்புவார்கள் என்று கூறியிருந்தார்.

Image: getty

சுவிட்சர்லாந்து ஐரோப்பிய பொருளாதார மண்டலத்தில் இணைவதா வேண்டாமா என வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியதில், வேண்டாம் என நாடு தனது மறுப்பை தெரிவித்தது.

இதனால், சுவிஸ் அரசு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான விண்ணப்பத்தை ரத்து செய்தது.

இப்போது மீண்டும் அதே விடயத்தைக் குறித்து விவாதிப்பது புத்திசாலித்தனம் அல்ல என்று கூறியுள்ளார் Christian Democratic People கட்சியின் Filippo Lombardi.

ஏற்கனவே பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற விரும்பி வாக்களித்துள்ள நிலையில், இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இரண்டாவது அவமதிப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.

Image: getty

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்