ஜேர்மன் எல்லையில் பொலிசாரை கண்மூடித்தனமாக தாக்கிய சுவிஸ் இளம்பெண்: வெளியான காரணம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பாஸல் பகுதி வழியாக ஜேர்மனிக்கு செல்ல முயன்ற சுவிஸ் இளம்பெண் தடுத்து நிறுத்தப்பட்டதால் அவர் பொலிசாரை கண்மூடித்தனமாக தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த புதனன்று மாலை, மே 6 ஆம் திகதி பாஸல் பகுதியில் அமைந்துள்ள ஜேர்மன் எல்லை வழியாக 20 வயது சுவிஸ் இளம்பெண் ஒருவர் கடக்க முயன்றுள்ளார்.

எல்லை கண்காணிப்பில் பணியாற்றி வந்த ஜேர்மன் பொலிசார், அவரை தடுத்து நிறுத்தி விசாரித்ததில், அவர் அவசரமாக பெர்லின் செல்ல வேண்டும் என மட்டும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு ஜேர்மனி செல்வதை அனுமதிக்க முடியாது என தடுத்த பொலிசாரில் ஒருவரை அவர் திடீரென்று தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பொலிசார் அவரை கைவிலங்கு அணிவித்துள்ளனர். சுவிஸ் பகுதியில் வைத்து ஜேர்மன் பொலிசாரால் அவரை கைது செய்ய முடியாது என்பதால்,

உரிய முறைப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. தற்போது அவர் மீது குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட இருப்பதாக மட்டும் பொலிசார் வாய்மொழியாக தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்