இறைச்சிக் கூடங்களை மூடும் அண்டை நாடுகள்... சுவிட்சர்லாந்தின் நிலை என்ன? வெளியான தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

கொரோனா தொடர்பில் ஜேர்மனி இறைச்சிக் கூடங்களை மூடிவரும் நிலையில், சுவிட்சர்லாந்தில் அதுபோன்ற நிலை ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் இறைச்சிக் கூடங்கள் தொடர்பில் இதுவரை கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை என கூறும் அதிகாரிகள்,

தனிப்பட்ட நபர்கள் கொரோனாவில் சிக்குவது அனைத்து துறையிலும் இருப்பது போன்று சுவிஸில் இறைச்சிக் கூடங்களில் பணியாற்றுபவர்களில் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இறைச்சிக் கூடங்களில் நெருக்கமாக நின்று ஊழியர்கள் பணியாற்றும் நிலை இருப்பதால் ஜேர்மனி மற்றும் அமெரிக்காவில் பல எண்ணிக்கையிலான இறைச்சிக் கூடங்கள் மூடப்பட்டன.

ஆனால் சுவிஸில் அதே நிலை இல்லை எனவும், ஜேர்மனியைவிடவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது எனவும் அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுவிஸ் நிறுவனங்கள் ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளதால்,

சரி பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒரே நேரத்தில் பணியாற்றும் சூழல் ஏற்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் ஜேர்மனியில் செயல்படும் இறைச்சிக் கூடங்கள் தொடர்பில் சுவிஸ் நிர்வாகம் கண்காணிப்பில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியில் பெரும்பாலான இறைச்சிக் கூடங்கள் கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

ஊழியர்களில் சுமார் 20 சதவீதத்தினர் கொரோனாவுக்கு இலக்கானதாகவும் ஜேர்மனியில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன.

260 பேர் பணியாற்றி வந்த ஒரு இறைச்சிக் கூடத்தில் 50 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்