சுவிஸ் எல்லையில் மருந்துகளுடன் சிக்கிய கால்நடை மருத்துவர்: வெளியான பூதாகார உண்மை

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில், பல விவசாயிகள், சட்ட விரோதமாக தங்கள் கால்நடைகளுக்கு மருந்துகள் வாங்கிவந்த விடயம் தெரியவந்துள்ளது.

கால்நடை மருத்துவர் ஒருவர் சுவிஸ் எல்லையில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் தனது கார் நிறைய மருந்துகளுடன் சிக்கியதையடுத்து இந்த பெரும் மோசடி குறித்த உண்மை வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் இது தொடர்பாக அபராதம் உட்பட 51 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆண்டொன்றிற்கு 11,000 சுவிஸ் ஃப்ராங்குகள் மதிப்பிலான மருந்துகளை, விவசாயிகள் சுவிட்சர்லாந்தில் அவர்கள் வாங்கும் தொகையை விட பாதி விலைக்கு வாங்கியுள்ளதாக அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

பிரெஞ்சு கால்நடை மருத்துவர் ஒருவர் சுவிஸ் எல்லையில் சுங்க அதிகாரிகளிடம் பிடிபட்டதையடுத்து இந்த மோசடி வெளிவந்தது.

அந்த கால்நடை மருத்துவர் சிக்கியதைத் தொடர்ந்து பொலிசார் பிரான்சிலும் சுவிட்சர்லாந்திலும் விசாரணைகளைத் துவக்கியுள்ளார்கள்.

200க்கும் அதிகமான சுவிஸ் மற்றும் பிரெஞ்சு விவசாயிகள், பிரெஞ்சு கருப்புச் சந்தை வியாபாரி ஒருவரிடமிருந்து இந்த மருந்துகளை வாங்கியுள்ளார்கள்.

இதற்கு காரணம் சுவிட்சர்லாந்தில் மருந்துகளின் விலை அதிகமாக இருப்பதுதான் என அபராதம் விதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் கூற, விவசாயிகள் சட்டத்திற்கு கீழ்ப்படியவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், சட்டவிரோத மருந்து இறக்குமதியை வன்மையாக கண்டிக்கிறோம் என்கிறார் சுவிஸ் விவசாயிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த Sandra Helfenstein.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்