சுவிட்சர்லாந்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தலின்போது பின்பற்றவேண்டிய புது நெறிமுறைகள்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்துக்குள் நுழைவது தற்போது சற்று எளிதாகியுள்ளது.

அமுலுக்கு வந்துள்ள புது நெறிமுறைகள், பிஸினஸ் தொடர்பான சந்திப்புகள் நடத்தவும், எல்லை தாண்டி இயங்கும் நிறுவனங்கள் இயங்கவும் அனுமதிக்கின்றன.

எல்லையில் போக்குவரத்து அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட சமயத்தில் மூடப்பட்ட எல்லை கடக்கும் பகுதிகள் சில திறக்கப்படுகின்றன, என்றாலும் கட்டுப்பாடுகள் அமுலில்தான் தொடர்ந்து இருக்கும்.

பள்ளிகளும், சில கடைகளும் மீண்டும் திறக்கப்பட உள்ளன. மதுபான விடுதிகளும், உணவகங்களும் திறக்கப்படுகின்றன, ஆனால் கட்டுப்பாடுகளுடன்.

ஒரு மேசையில் நான்கு பேர் அமர மட்டுமே அனுமதி, நிற்க யாருக்கும் அனுமதி இல்லை. உணவகங்களுக்கு வருவோர் தங்கள் முகவரியையும் தொலைபேசி எண்ணையும் கொடுத்துச் செல்லவேண்டும் என்ற விதிமுறை நீக்கப்படுகிறது.

அருகிலுள்ள நாடு ஒன்றில் வாழ்ந்தாலும், அவர்கள் பிள்ளைகள் சுவிட்சர்லாந்தில் படிக்கும் பட்சத்தில், அவர்கள் எல்லை தாண்ட அனுமதிக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களைவிட்டு 2 மீற்றர்கள் தள்ளியே இருக்கவேண்டும். ஆனால் பிள்ளைகள் அருகருகே அமர தடையில்லை.

சில விளையாட்டுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது, ஆனால் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது.

ஆகவே கால்பந்து போட்டிகளுக்கு அனுமதியில்லை. வாகனம் ஓட்ட பயில்வோர் மீண்டும் தங்கள் பயிற்சியை தொடரலாம், ஆனால் மாஸ்குகள் கட்டாயம்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்