எல்லைகளை மிக விரைவில் திறக்க முடிவு: பிரான்ஸ், ஜேர்மனியிடம் ஒப்புதல் தெரிவித்த சுவிஸ்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

கொரோனா தாக்குதல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து, எல்லைகளை திறக்க சுவிஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த சில வாரங்களில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவிடம் சுவிஸ் நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.

எல்லைகளை திறக்கும் சுவிஸ் நிர்வாகத்தின் முடிவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அண்டை நாடுகளுடனான எல்லையை திறக்க சமீப நாட்களாக கோரிக்கை வலுத்து வந்துள்ளதாக கூறும் அரசியல் பிரமுகர்கள்,

கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் ஏற்பட்டால் எல்லையை மூடுவதற்கு நாடுகள் ஏற்பாடு செய்வது முக்கியம் எனவும் தெரிவித்துள்ளனர்.

எல்லைகளை திறப்பதால் சுற்றுலாத்துறை வளர்ச்சி காணும் என குறிப்பிட்டுள்ள சுவிஸ் சுற்றுலா சங்கத்தின் தலைவர் நிக்கோலோ பகனினி,

பல ஜேர்மனியர்களை சுவிட்சர்லாந்தில் விடுமுறைக்கு செல்ல ஊக்குவிக்க முடியும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

நாட்டின் எல்லைகளை நாம் எப்போதும் மூடி வைக்க முடியாது என குறிப்பிட்டுள்ள வெளியுறவுக் கொள்கை ஆணையத்தின் உறுப்பினர் பிரான்ஸ் க்ரூட்டர்,

எல்லையைத் திறப்பது கடுமையான கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்