சமூக விலகல் விதிகளை மீறி பார்ட்டி கொண்டாடிய 300 இளைஞர்கள்: தட்டிக்கேட்ட பொலிசாருக்கு ஏற்பட்ட வருத்தம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் இளைஞர்கள் சட்ட விரோதமாக பார்ட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதுமன்றி, தட்டிக்கேட்ட பொலிசார் மீது பொருட்களை தூக்கி வீசியதால் அவர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் Neuchâtel நகரில், ஏரிக்கருகில் சட்டவிரோதமாக இளைஞர்கள் பார்ட்டி வைத்து கொண்டாடுவதாக பொலிசாருக்கு புகார் வந்துள்ளது.

அங்கு சமூக விலகல் விதிகளையும் மதிக்காமல், சுமார் 300 இளைஞர்கள் கூடியுள்ளனர்.

பொலிசாரைக் கண்டதும் குடிபோதையிலிருந்த அந்த இளைஞர்கள், அவர்கள் மீது கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் தூக்கி பொலிசார் மீது எறியத் தொடங்கியுள்ளனர்.

வருத்த முற்றாலும், பாதுகாப்பு காரணங்கள் கருதி பார்ட்டியை குலைக்கவேண்டாம் என பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

அத்துடன் யாரும் கைது செய்யப்படவும் இல்லை, யாரும் அடையாளம் காணப்படாததால் யார் மீதும் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவும் போவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்