100 சதவிகிதம் துல்லியமான முடிவுகளைக் கொடுக்கும் கொரோனா பரிசோதனை: சுவிட்சர்லாந்துடன் பேச்சுவார்த்தையில் பிரித்தானியா!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ள 100 சதவிகிதம் துல்லியமான முடிவுகளைக் கொடுக்கும் பரிசோதனை கிட்களை வாங்குவதற்கு பிரித்தானியா முதலான நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

சுவிஸ் பார்மா நிறுவனமான Roche தயாரித்துள்ள அந்த கொரோனா ஆன்டிபாடி பரிசோதனை கிட்களை மொத்தமாக வாங்குவதற்காக பிரித்தானியா ஏற்கனவே சுவிட்சர்லாந்துடன் பேச்சு வார்த்தைகளை துவக்கி விட்டதாக தெரிவித்துள்ளது.

Roche நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த பரிசோதனை மிகவும் நம்பகத்தன்மையுடையதாக தோன்றுகிறது, அதை பரிசோதித்தவர்கள் அதை பயன்படுத்த பச்சைக்கொடி காட்டிவிட்டார்கள் என்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் Edward Argar.

இந்த ஆன்டிபாடி பரிசோதனைகள் கடந்த காலத்தில் எந்த காலகட்டத்திலாவது ஒருவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளாரா என்பதைக் கண்டுபிடிக்கும் திறன் வாய்ந்தவையாகும்.

அதாவது ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதா என்பதை இந்த பரிசோதனைகள் காட்டிவிடும்.

பிரித்தானியாவில் இன்னமும் கொரோனாவல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 500 ஆக உள்ள நிலையில் அரசு கட்டுப்பாடுகளை நெகிழ்த்தத் தொடங்கியுள்ளதால், மக்களின் உயிர்களை அபாயத்திற்குள்ளாக்கியிருப்பதாக அரசு மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களோ ஒரு நம்பத்தகுந்த ஆன்டிபாடி பரிசோதனை கிடைத்தால், நம்பி மக்களை வேலைக்கு அனுப்பலாமே என்று எண்ணுகிறார்கள்.

இந்த நிலையில் சுவிட்சர்லாந்து கண்டுபிடித்துள்ள இந்த பரிசோதனை 100 சதவிகிதம் துல்லியமாக முடிவுகளை கொடுப்பதாக பிரித்தானிய ஆய்வாளர்களும் ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து, அதை வாங்கும் முயற்சியில் பிரித்தானியா இறங்கியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்