காரணங்கள் போதுமானதாக இல்லை: 4 ஆண்டுகளுக்கு பின்னர் இளைஞரை வெளியேற்றும் சுவிஸ்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
760Shares

சுவிட்சர்லாந்தில் வரி செலுத்தும் அளவுக்கு தொழில் செய்து முன்னேறியுள்ள அகதி இளைஞரை காரணங்கள் போதுமானதாக இல்லை என கூறி சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப சுவிஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஈராக்கியரான 27 வயது அராம் மஹ்மூத் என்ற இளைஞரை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதில் சுவிட்சர்லாந்து முனைப்பு காட்டி வருகிறது.

ஆனால் அவரது சுவிஸ் நண்பர்கள், மற்றும் அவருக்கு அறிமுகமான பலரும் தற்போது அவரை திருப்பி அனுப்புவதில் இருந்து சுவிஸ் நிர்வாகம் பின்வாங்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளதுடன் கையெழுத்து வேட்டையிலும் இறங்கியுள்ளனர்.

தற்போது சோலோத்தர்ன் மண்டலத்தில் குடியிருக்கும் மஹ்மூத், ஜேர்மன் மொழி பேசுகிறார் என்பது மட்டுமல்ல,

கையில் பணமோ குடும்பமோ ஏதுமின்றி சுமார் நாலரை ஆண்டுகளுக்கு முன்னர் சுவிட்சர்லாந்தில் குடியேறிய மஹ்மூத் தற்போது வரி செலுத்தும் அளவுக்கு தொழில் செய்து உயர்ந்துள்ளார்.

முடிதிருத்தும் கடை ஒன்றை நடத்திவரும் மஹ்மூத் பலருக்கும் வேலை வாய்ப்பும் உருவாக்கி அளித்துள்ளதுடன்,

எந்த தவறான பேச்சுக்கும் இதுவரை இடம் தந்ததில்லை. ஒரு புது வாழ்க்கையை உருவாக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியதாகவே அவர் தெரிவித்துள்ளார்.

முடிதிருத்தும் கடை மூலம், இந்த பிராந்தியத்தில் நான் கனவு கண்டிராத அங்கீகாரம் எனக்கு கிடைத்தது என்கிறார் மஹ்மூத்.

பல வருட கடின உழைப்பு மற்றும் வெற்றிகரமான ஒருங்கிணைப்புக்குப் பிறகு, எனது கனவையும் எனது புதிய நண்பர்களையும் நான் கைவிட வேண்டும் எனும் நிலை தமக்கு அச்சத்தை தருவதாக மஹ்மூத் தெரிவித்துள்ளார்.

ஈராக் இன்னும் சகஜ நிலைக்கு திரும்பாத போதும் இளைஞர் அராம் மஹ்மூத் திரும்பி செல்வதை தவுர வேறு வழியில்லை என கூறும் சுவிஸ் நிர்வாகம்,

சுவிட்சர்லாந்திற்கு அவர் குடியேறியதற்கான காரணம் போதுமானதாக இல்லை என்பதை நிர்வாகம் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்