சுவிஸில் ஜேர்மானியரின் அதிர்ச்சி செயல்: மனைவியுடன் சடலமாக மீட்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சோலோத்தர்ன் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்றில் இருந்து பொலிசார் ஆண் மற்றும் பெண் இருவரை சடலமாக மீட்டுள்ளனர்.

சனிக்கிழமை பகல் நடந்த இச்சம்பவத்தில், அந்த ஆண் 61 வயதான ஜேர்மானியர் எனவும், சடலமாக மீட்கப்பட்ட பெண் 30 வயது துனிசியா நாட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

கணவன் மனைவியான இருவரும் ஆல்டன் அருகே வாங்கன் பகுதியில் குடியிருந்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று கருத்து வேறுபாடு காரணமாக இருக்கலாம் அந்த கணவர் தமது மனைவியை கொன்றுவிட்டு தாமும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என முதற்கட்ட தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும் சரியான தகவல் இன்னும் தெளிவாக தெரியவில்லை எனவும், விசாரணை நடந்துவருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்