31 வயது வித்தியாசம்... சுவிஸில் குடியேறிய சில மாதங்களில் கணவரால் ஏற்பட்ட துயரம்: வெளியான பின்னணி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் குடியிருப்பு ஒன்றில் இருந்து சனிக்கிழமை மீட்கப்பட்ட இரு சடலங்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் சோலோத்தர்ன் மண்டலத்தில் சனிக்கிழமை பகல் குடியிருப்பு ஒன்றில் இருந்து 61 வயது ஆண் ஒருவரின் சடலமும் 30 வயது பெண் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டது.

இதில் 30 வயது பெண்மணி கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும், அந்த 61 வயது நபர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில், கொல்லப்பட்ட அந்த பெண்மணி துனிசியா நாட்டவர் என்பதுடன், அவர் பெயர் ஹனன் எனவும், சில மாதங்களுக்கு முன்னரே புதிய வாழ்க்கை தேடி சுவிட்சர்லாந்துக்கு குடியேறியதாகவும் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி ஏப்ரல் மாதம், தமது பேஸ்புக் பக்கத்தில், துனிசியாவில் தமது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும், கணவரால் குடும்பத்தை காப்பாற்ற முடியாத சூழல் எனவும், நல்ல உள்ளங்கள் நன்கொடை அளிக்க முன்வர வேண்டும் எனவும் பதிவு செய்துள்ளார்.

ஆனால் தற்கொலை செய்து கொண்ட 61 வயது ஜேர்மானியருக்கும் இவருக்கும் எப்போது தொடர்பு ஏற்பட்டது, இவர்கள் திருமணம் செய்து கொண்டது எப்போது என பொலிசார் விசாரணை மேர்கொண்டு வருகின்றனர்.

சனிக்கிழமை பகல் ஜேர்மானியரின் ஒரு மகன் இவர்களது இல்லத்திற்கு சென்றுள்ளார். வியாழக்கிழமையில் இருந்தே தந்தையை தொடர்புகொள்ள முடியவில்லை என்பதால், அந்த இளைஞர் விசாரிக்க சென்றுள்ளார்.

கதவு திறக்க தாமதமான நிலையில் அந்த இளைஞர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

கமல் என மட்டும் அறியப்படும் அந்த ஜேர்மானியர் ஏன் தமது இளவயது மனைவியை கொலை செய்து தாமும் தற்கொலை செய்துகொண்டார் என பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்