மூன்று பாலியல் தொழிலாளர்கள் அளித்த புகார்: நாடு கடத்தப்படும் நிலையில் சுவிஸ் இளைஞர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சூரிச்சின் சிவப்பு விளக்கு மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் மூன்று பாலியல் தொழிலாளர்களை மிரட்டி, உறவு வைத்துக் கொண்டதுடன் கொள்ளையிட்ட விவகாரத்தில் தற்போது நாடுகடத்தப்படும் நிலையில் சிக்கியுள்ளார்.

போர்த்துகல் நாட்டை பூர்வீகமாக கொண்டவர் அந்த 24 வயது இளைஞர். இவரே தற்போது பாலியல் தொழிலாளர்களிடம் அத்துமீறியதாகவும் பணம் கொள்ளையிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு தீர்ப்பை எதிர்பார்த்துள்ளார்.

இவருக்கெதிரான 30 பக்க குற்றப்பத்திரிகையில், பாலியல் துஸ்பிரயோகம், அத்துமீறல், தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 22 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

சூரிச்சில் பிறந்து வளர்ந்த குறித்த 24 வயது இளைஞர், சூரிச்சின் சிவப்பு விளக்கு மாவட்டத்தில் உள்ள ஒரு பாலியல் தொழிலாளியின் அறையில் கடந்த 2018 ஜூன் மாதம் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கியதாகவும் அவரது ஒப்புதல் இன்றி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த 8 நாட்களுக்கு முன்னர் இவர்கள் இருவரும் சந்தித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், தமக்கு மறுப்பு தெரிவித்த அந்த பாலியல் தொழிலாளியை தாக்கி அத்துமீறியதுடன், அவரிடம் இருந்து 1200 பிராங்குகள் தொகையை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

மட்டுமின்றி, இச்சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திற்கு பின்னர் இன்னொரு பாலியல் தொழிலாளியை அணுகி அவரிடம் இருந்து 200 பிராங்குகள் தொகையை திருடியுள்ளார்.

ஆனால் செவ்வாய் அன்று இந்த வழக்கின் விசாரணையின் போது, தன் மீதான குற்றச்சாட்டுகளை மொத்தமாக மறுத்த அந்த இளைஞர்,

போதை மருந்து தொடர்பான குற்றசாட்டுகளை மட்டுமே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், அந்த மூன்று பாலியல் தொழிலாளிகளும் தம்மிடம் கடன் பட்டுள்ளதாகவும், திருப்பித் தர நீண்ட காலமானதால் தாம் கடுமையாக நடந்து கொண்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.

ஆனால், நீதிமன்றத்தில் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருந்துவரும் அவருக்கு மொத்தம் 11 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கவும், 15 ஆண்டுகள் சுவிஸில் இருந்து நாடுகடத்தவும் அரசு தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.

மேலும், பாதிப்புக்கு உள்ளான இரு பாலியல் தொழிலாளிகளும் இன்னமும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை எனவும்,

இழப்பீடாக இருவருக்கும் 28,000 பிராங்குகள் மற்றும் 45,000 பிராங்குகள் பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது திட்டமிட்ட சதி எனவும், அந்த பாலியல் தொழிலாளர்கள் மூவரும் நிதி நெருக்கடி காரணமாக அந்த இளைஞரை சிக்க வைத்துள்ளதாக எதிர்தரப்பு வழக்குரைஞர் வாதிட்டுள்ளார்.

வழக்கு தொடர்பில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில், எதிர்வரும் ஜூன் 8 ஆம் திகதி தீர்ப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்