சுவிட்சர்லாந்தில் பாலியல் பொம்மைகள் விற்கும் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா ஆன்டிபாடி சோதனை கிட்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பாலியல் இன்பம் கொடுக்க பயன்படும் கருவிகள் தயாரிக்கும் சுவிஸ் நிறுவனம் ஒன்று கொரோனா ஆன்டிபாடி சோதனை கிட் ஒன்றை உருவாக்கியுள்ளது.

சூரிச் நிறுவனமான Amorana, பாலியல் இன்பம் கொடுக்க பயன்படும் கருவிகள் தயாரிக்கும் ஒரு பிரபல நிறுவனம்.

அந்த நிறுவனம் தான் கொரோனாவைக் கண்டுபிடிக்க உதவும் பரிசோதனை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

79.79 சுவிஸ் ஃப்ராங்குகள் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அந்த பரிசோதனை, வழக்கமாக செய்யப்படுவது போல் மூக்கிலிருந்து மாதிரி எடுத்து செய்யப்படும் சோதனை அல்ல, மாறாக அது நோயாளியின் உடலிலிருந்து இரத்தம் சேகரித்து, அதில் கொரோனாவுக்கெதிரான ஆன்டிபாடிகள் உள்ளனவா என கண்டறிவதற்காக செய்யப்படும் சோதனையாகும்.

ஆனால், அந்த பரிசோதனை நம்பத்தகுந்ததல்ல என நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். லாசேன் ஆய்வக வைரஸ் துறை மற்றும் மரபியல் துறை பேராசிரியரான Didier Trono, இந்த சோதனையில் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக தவறான முடிவுகள் காட்டப்படும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்