அமெரிக்காவிடமிருந்து கொரோனா தடுப்பூசியை பாதுகாக்க சுவிட்சர்லாந்து எடுத்துள்ள நடவடிக்கை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
463Shares

கொரோனா தடுப்பூசியை பாதுகாக்க தனது பாதுகாப்புத்துறையின் உதவியை நாடியுள்ளது சுவிட்சர்லாந்து.

எப்படியாவது ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டால், அப்படியாவது இந்த கொரோனாவால் ஏற்பட்டுள்ள மாபெரும் சிக்கலை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்துவிடலாம் என்பதால் உலகம் முழுவதும் ஏராளமான ஆய்வாளர்கள் கொரோனாவுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் மூழ்கியுள்ளார்கள்.

ஆனாலும், இதுவரை கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்க இன்னும் ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.

இதற்கிடையில், சுவிட்சர்லாந்தில் ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், அதை அமெரிக்கா போன்ற நாடுகள் பதுக்க முயற்சி செய்யலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அப்படி ஒரு நாடு தடுப்பூசி முழுவதையும் வாங்கி பதுக்கிக்கொள்ளும் நிலையில், உலகம் முழுவதிலும் உள்ள மற்ற நாடுகளுக்கு போதுமான அளவு தடுப்பூசியை விநியோகிக்க முடியாமல் போகும் சூழல் உருவாக வாய்ப்புள்ளது.

நமது இலக்கு இதுதான், சீக்கிரத்தில் சுவிட்சர்லாந்துக்கு ஒரு செயல்திறன் வாய்ந்த ஒரு தடுப்பூசி கிடைக்கவேண்டும் என்று கூறியுள்ள சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சர் Alain Berset, அதே நேரத்தில் உலகம் முழுவதிலும் கொரோனா தடுப்பூசிக்கான பெரிய தேவை உள்ளது, எல்லா நாடுகளுக்கும் சமமான அளவில் தடுப்பூசி கிடைக்கவேண்டும் என்றார்.

எனவே, மற்ற நாடுகள் ஏதாவது கொரோனா தடுப்பூசியை பெருமளவில் வாங்கி பதுக்குவதைத் தடுக்க தனது பாதுகாப்புத்துறையின் உதவியை நாடியுள்ளது சுவிட்சர்லாந்து.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்