சுவிட்சர்லாந்தில் மத வழிபாட்டுத்தலங்களை பயன்படுத்துவது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் மத வழிபாட்டுத்தலங்கள் இம்மாதம் (மே மாதம்) 28ஆம் திகதி முதல் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படுகின்றன. இந்த அறிவிப்பு மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

வழிபாட்டுத்தலங்களில் வழிபாடு செய்ய இன்னமும் தாமதமாகலாம் என்று எண்ணியிருந்தவர்களுக்கு இந்த திகதி சீக்கிரமாகவே தெரிகிறது.

அதே நேரத்தில், சுவிஸ் மக்கள் கட்சியின் உறுப்பினர்கள் சிலர், இந்த திகதி ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

தேவாலயங்கள் அதற்கும் முன்னதாகவே திறக்கப்படவேண்டும் என அவர்கள் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.

அத்துடன், பிரார்த்தனைக்கு வருவோரின் பெயர் மற்றும் மொபைல் எண்கள் சேகரிக்கப்பட்டு 14 நாட்களுக்கு சேமிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.

அதே நேரத்தில், மற்றவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை அளித்துள்ளதோடு, அரசு கேட்டுக்கொண்டதை விட அதிகமாகவே விதிகளைப் பின்பற்ற அவர்கள் முன்வந்துள்ளார்கள்.

உதாரணமாக, யூத குழுக்கள் பிரார்த்தனைக்கு வரும் தங்களவர்களை, 26 மணி நேரம் முன்னதாகவே பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

அத்துடன், மசூதிகள், தொழுகைக்கு வரும் தங்கள் மக்கள் 2 மீற்றர் இடைவெளி விட்டு அமரும் வகையில் அடையாளங்களை இட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்