கொரோனாவின்போதும் வெளிநாட்டு பணியாளர்களை சுவிட்சர்லாந்து அனுமதித்ததன் ரகசியம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சில மாதங்களுக்கு முன்பு வரை, சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டினர் சுற்றுலா வந்து தொல்லை செய்வதாக பல மாகாண மக்கள் அதிருப்தி தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

ஆனால், இன்று வெளிநாட்டினர் இல்லாவிட்டால் எங்கள் நாட்டில் கடும் குழப்பம் ஏற்பட்டிருக்கும் என்கிறது சுவிட்சர்லாந்து.

கொரோனா பரவத் தொடங்கியதும் பல நாடுகள் தங்கள் எல்லைகளை மூடின. இதுவரை தங்கள் வீட்டுக்குப் பின்னால்தான் அடுத்த நாட்டின் எல்லை இருக்கிறது என்பதைக் கூட உணராத ஒரு மொத்த சந்ததிக்கு, அந்தப் பக்கம் இருக்கும் நண்பர்கள் உறவினர்களை பிரியவேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது.

அப்படியிருக்கும் நிலையிலும், சுவிட்சர்லாந்து தனது நாட்டு எல்லைகளை முற்றிலும் மூடவேயில்லை.

பொருளாதாரத்துக்காக வெளிநாடுகளை பெருமளவில் நம்பியிருக்கும் சுவிட்சர்லாந்து, மார்ச் மாத மத்தியில் மற்ற நாடுகளைப் போல் எல்லைகளை மூடியிருந்தால் கடுமையான இழப்பை சந்தித்திருக்கும்.

POOL / AFP

ஆகவே, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் சுவிட்சர்லாந்து தனது எல்லைகளை வெளிநாட்டவர்களுக்கு முற்றிலும் மூடவேயில்லை.

ஏனென்றால், சுவிஸ் பொருளாதாரத்துக்கு வெளிநாட்டு குடிமக்கள் அவ்வளவு முக்கியம், குறிப்பாக அதன் மருத்துவ துறைக்கு. 2019இல் சுமார் 325,000 பேர் அனுதினமும் எல்லை தாண்டி வேலைக்காக சுவிட்சர்லாந்துக்குள் வந்தார்கள்.

எல்லைகளை திறந்து வைத்திருந்தது குறிப்பாக மருத்துவப்பணியாளர்களை எல்லை தாண்டி அனுமதித்தது, அதுவும் கொரோனா நேரத்தில், சுவிட்சர்லாந்துக்கு குறிப்பிடத்தக்க பயனுள்ள முக்கிய விடயமாக அமைந்துள்ளது.

வெளிநாட்டு பணியாளர்கள் மட்டும் இல்லாதிருந்தால் சுவிஸ் மருத்துவமனைகள் கடும் குழப்பத்தை சந்திக்க நேர்ந்திருக்கும் என்கிறார் மூத்த மருத்துவர் ஒருவர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்