மிக மோசமாக கொல்லப்படலாம்: சுவிஸ் நிர்வாகத்தால் குமுறும் வெளிநாட்டு இளம்பெண்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

கடந்த 5 ஆண்டுகளாக சுவிஸில் வசித்துவரும் இளம்பெண் உள்ளிட்ட ஈரானிய குடும்பத்தின் புகலிடக்கோரிக்கையை நிராகரித்துள்ளது சுவிஸ் நிர்வாகம்.

இதனால் குறித்த ஈரானிய குடும்பம் சுவிட்சர்லாந்தைவிட்டு எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதிக்குள் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது 22 வயதாகும் Arezu Eljasi கடந்த 5 ஆண்டுகளாக பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் பெர்ன் மண்டலத்தில் வசித்து வருகிறார்.

அடுத்த இலையுதிர்காலத்தில் இருந்து இங்கேயே கல்வி கற்கவும் முடிவு செய்து அதற்கான ஆயத்தமும் மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் குடிபெயர்வோருக்கான மாநில செயலகம் சமீபத்தில் இவர்களது புகலிடக் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

மண்டல நிர்வாகத்தின் இந்த முடிவு தங்களை உலுக்கியுள்ளதாக கூறும் Eljasi, அடுத்த இரு மாதங்களில் நீங்கள் இறக்கப்போகிறீர்கள் என கூறியது போன்ற நிலையில் தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஈரானில் குர்து மக்களுக்கான ஜனநாயக கட்சி ஒன்றில் Eljasi மற்றும் அவரது தந்தை ஆகியோர் இணைந்து செயல்பட்டு வந்துள்ளனர்.

ஈரானிய நிர்வாகம் மீது கடும் விமர்சனங்கள் முன்வைத்து வந்த Eljasi மீது மோதல் போக்கையே ஈரான் கடைபிடித்து வந்தது.

இந்த நிலையிலேயே Eljasi குடும்பம் ஈரானில் இருந்து தப்பி, சுவிட்சர்லாத்தில் குடிபெயர்ந்தனர்.

தற்போது ஈரானுக்கு திரும்புவது என்பது தற்கொலைக்கு சமம் என குறிப்பிட்டுள்ள Eljasi, கண்டிப்பாக ஈரானிய நிர்வாகம் தங்களை கைது செய்து மரண தண்டனைக்கு விதிப்பார்கள் என்றார்.

ஈரானிய நிர்வாகத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என சட்டத்தில் இடம் இருப்பதாக கூறும் Eljasi, இது குர்து மக்கள் மீது அடிக்கடி முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆண்களுக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்றால், பெண்களின் நிலை மிக மோசம் என குறிப்பிட்டுள்ளார் Eljasi.

பெண்கள் பலாத்காரத்திற்கு இரையாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, இறுதியில் கொல்லப்படலாம் என்கிறார் அவர்.

தற்போது Eljasi ஆதரவாக இணையத்தில் தகவல் வெளியான நிலையில், ஈரானிய ஆளும் கட்சி ஆதரவாளர்களிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொலை மிரட்டல் விவகாரத்தை சுட்டிக்காட்டி புதிய புகலிடக் கோரிக்கை மனுவை மீண்டும் சமர்ப்பிக்கலாம் என மாகாண நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்