பிரிந்து செல்வதாக கூறிய காதலி: துப்பாக்கி முனையில் மிரட்டி சுவிஸ் இளைஞரின் பகீர் செயல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் தம்மை விட்டு பிரிந்து செல்வதாக கூறிய காதலியை சுவிஸ் இளைஞர் துப்பாக்கியை காட்டி பல மணி நேரம் மிரட்டியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு துவக்கத்தில் ராணுவ சேவையில் ஈடுபட்டு வந்த 25 வயது கட்டுமான தொழில் செய்யும் இளைஞரும்,

23 வயதான இளம்பெண்ணும் நட்பாக பழகி பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் நாளடைவில் அந்த இளைஞரின் மீதான நம்பிக்கையை குறித்த இளம்பெண் இழந்துள்ளார்.

இதனால், ஒருகட்டத்தில் இருவரும் பிரிந்துவிடுவதே நல்லது என கூறி, தமது நிலையை அவர் அந்த இளைஞரிடம் தெரிவித்துள்ளார்.

இது அந்த இளைஞரால் தாங்கிக்கொள்ள முடியாமல் போனது. தொடர்ந்து இருவரும் ஒன்றாக வசித்து வந்த குடியிருப்பில் வைத்து குறித்த இளம்பெண்ணை கொன்று விட்டு, வெளிநாடு தப்ப வேண்டும் அல்லது, அவரிடம் பேசி புரிய வைக்க வேண்டும் என அந்த இளைஞர் திட்டமிட்டுள்ளார்.

சம்பவத்தன்று, 2019 மே மாதம் அந்த இளைஞரின் குடியிருப்பில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

ஆனால் இளைஞர் திட்டமிட்டபடி, குறித்த இளம்பெண் தமது முடிவில் இருந்து மாறுவதாக இல்லை என தெரிவித்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தயார் நிலையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த இளம்பெண்ணை மிரட்டியுள்ளார்.

மட்டுமின்றி தமது காதலை முறிக்கும் காரணத்தையும் அவர் கட்டாயப்படுத்தி விசாரித்துள்ளார்.

சில மணி நேரம் இதே நிலை நீடித்துள்ளது. ஒருகட்டத்தில் அந்த இளைஞர் உணவு வரவழைத்து இருவரும் ஒன்றாக சாப்பிட்டுள்ளனர்.

பின்னர் இருவரும் திரைப்படம் ஒன்றையும் பார்த்துள்ளனர். மட்டுமின்றி, குறித்த இளம்பெண் அந்த இளைஞரின் குடியிருப்பில் இரவு தங்கியுள்ளதுடன், இருவரும் அந்த இரவு கடைசியாக உடலுறவும் வைத்துக் கொண்டுள்ளனர்.

ஆனால் இவை அனைத்தும் பயத்தின் மீது நடந்ததாகவும், அந்த இளைஞருடன் துப்பாக்கி முனையில் இருந்த ஒவ்வொரு நொடியும் தாம் செத்துப் பிழைத்ததாக குறித்த இளம்பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

தம்மை கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபடுத்தியதாகவும் முதலில் குறித்த இளம்பெண் தெரிவித்திருந்தார்.

ஆனால் நீதிமன்ற விசாரணையில், இருவரும் ஒப்புதலுடனையே உறவு வைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த சூரிச் மாவட்ட நீதிமன்றம் அந்த நபருக்கு 24 மாத நிபந்தனை சிறைத்தண்டனை விதித்தது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக 4,000 பிராங்குகள் அளிக்கவும் குற்றவாளிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்