சுவிஸில் பல்கலைக்கழக பேராசிரியர் சக பெண் ஊழியரிடம் கேட்ட அந்த கேள்வி: வெளியான விசாரணை அறிக்கை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பிரபல பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் சக பெண் ஊழியர்களிடம் அவமரியாதையாக நடந்து கொண்டது தற்போது விசாரணை முன்னெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சூரிச் ETH பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஒரு பேராசிரியரே இவ்வாறு அவமரியாதையாக நடந்து கொண்டதாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த விசாரணை தொடர்பிலான அறிக்கையின் சில பகுதிகள் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது.

அதில், 2015 ஆம் ஆண்டு தொழில்முறை பயணத்தின் போது தம்முடன் வந்த சக பெண் ஊழியரிடம், நள்ளிரவில் அவர் தங்கியிருந்த ஹொட்டல் அறைக்கு வரலாமா என கேட்டுள்ளார்.

அதற்கு அந்த பெண் ஊழியர் காட்டமாக பதிலளித்ததாகவும், அவர் மீதிருந்த பிரியத்தால் மட்டுமே தாம் அவ்வாறு வினவியதாகவும் குறித்த பேராசிரியர் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

இன்னொருமுறை தம்முடன் நட்பாக பழகிய ஒரு பெண் ஊழியரிடம் உள்ளாடை அளவு தொடர்பில் விசாரித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் குறித்த பெண்ணும் அந்த பேராசிரியருக்கு காட்டமான பதில் அளித்துள்ளார்.

இருப்பினும், அவருக்கு அந்த பேராசிரியர் உள்ளாடைகளை பரிசாக அளித்துள்ளது புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அது ஒரு விளையாட்டிற்காகவே தாம் செய்ததாக பேராசிரியர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, அவர்கள் விரும்பாவிட்டாலும் பேராசிரியர் பெண்களைத் தொட்டுப் பேசுவது வழக்கமாக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த அறிக்கையின்படி, பேராசிரியர் பல முறை பல்கலைக்கழக நெறிமுறைகளை மீறியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்