கொரோனாவிலிருந்து விடுபட்டாலும் விடாத அறிகுறிகளால் துன்பப்படும் இளம் வயதினர்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஜெனீவா மற்றும் லாசேனில் தங்கள் முப்பது வயதுகளிலிருக்கும் பலர் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு பல மாதங்களான நிலையிலும், தொந்தரவு செய்யும் அறிகுறிகள் தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.

வாசனை இழப்பு, சுவாசிக்க திணறுதல், இருமல் மற்றும் கடுமையான சோர்வு ஆகிய அறிகுறிகள் தொடர்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வேறு சிலர், வேகமான இதயத் துடிப்பு, தலைவலிகள், பேதி மற்றும் தசை வலி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சாதாரணமாக குறைந்த அளவு அறிகுறிகள் கொண்ட கொரோனா நோயாளிகள் இரண்டு வாரங்களில் குணமடைந்துவிடவேண்டும்.

ஆனால், இளம் வயதினர் பலருக்கு தொடர்ந்து அறிகுறிகள் பல மாதங்களுக்குப் பின்னும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இப்படி நீண்ட கால அறிகுறிகள் கொண்டோரில் சுமார் 68 சதவிகிதம் பேர் ஓரளவு ஆக்டிவாக இருப்பவர்கள், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுமல்ல.

ஆனால், இந்த அறிகுறிகளால் அவர்களால் எதிலும் கவனம் செலுத்தவோ, உடற்பயிற்சி செய்யவோ, உடலை பயன்படுத்தி செய்யும் வேலைகளை செய்யவோ முடியாமல் தவிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிலருக்கு கவனம் செலுத்த இயலாமை, குறுகிய கால மறதி, தலைவலிகள், குளிர்தல் அல்லது வியர்த்தல், இதயம் மிக வேகமாக துடித்தல், மூச்சு விடுவதில் சிரமம், வாசனை இழப்பு, அதீத சோர்வு, பசியின்மை, வறட்டு இருமல் மற்றும் தூக்க வராமல் தவித்தல் ஆகிய அறிகுறிகள் அவ்வப்போது வந்து போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த பாதிப்பு உலகின் பல நாடுகளில் உள்ளவர்களுக்கும் இருப்பது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்