சுவிட்சர்லாந்தில் இன்றுமுதல் அமுலுக்கு வரும் மாற்றங்கள்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

இன்று முதல் சுவிட்சர்லாந்தில் அமுலுக்கு வரும் மாற்றங்களை அரசு அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில், இன்று (ஜூன் 22) முதல் 1,000 பேர் வரை ஓரிடத்தில் கூட அனுமதியளிக்கப்படுகிறது.

அதேபோல், சமூக இடைவெளியும் இரண்டு மீற்றரிலிருந்து ஒன்றரை மீற்றர்களாக குறைக்கப்படுகிறது.

பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது மாஸ்க் அணிவது பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால், அதிகம் பேர் கூடும் இடங்களில் அது கட்டாயமாக்காப்பட உள்ளது. உணவகங்களுக்கும் இரவு விடுதிகளுக்கும் ஊரடங்கு விதிகள் விலக்கிக்கொள்ளப்பட உள்ளன.

வீடுகளிலிருந்து வேலை பார்ப்பது குறித்து இனி அலுவலகங்கள் முடிவு செய்துகொள்ளலாம்.

பணியாளர்கள் அலுவலகம் திரும்பலாம் என பரிந்துரைக்கும் அரசு, அதே நேரத்தில் தொழிலாளர் சட்டங்களுக்குட்பட்டு பணியாளர்களின் நலனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது அலுவலகங்களின் கடமை என்றும் தெரிவித்துள்ளது

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்