சுரங்கப்பாதையில் ’யூ டர்ன்’ எடுத்த நபர்: பொலிசார் அளித்த கடுமையான தண்டனை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுரங்கப்பாதை ஒன்றில் யூ டர்ன் செய்த ரஷ்ய நாட்டவர் ஒருவருக்கு வாகனம் ஓட்ட தடை விதித்துள்ளனர் சுவிஸ் பொலிசார்.

சுவிட்சர்லாந்தின் Gotthard சுரங்கப்பாதையில் பயணித்துக்கொண்டிருந்த 60 வயதுடைய ஒருவர் யூ டர்ன் செய்து தவறான பாதையில் வாகனத்தை செலுத்தினார்.

இதனால், அவ்வழியே சென்றுகொண்டிருந்த வாகனங்கள் நிற்க வேண்டியதாயிற்று. அத்துடன் அந்த கார் வந்த வழியே திரும்பி தவறான வழியில் பயணித்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக எதிரே வந்த வாகனங்கள் எதனுடனும் மோதாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

பின்னர் அந்த வாகனத்தை ட்ரேஸ் செய்த பொலிசார், அதன் சாரதியை கைது செய்தனர். அவர் இனி வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்