சுவிட்சர்லாந்தில் இரவு முழுவதும் சிவப்பு விளக்குகளை எரியவிட்ட தியேட்டர்கள்: காரணம் இதுதான்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

நேற்று இரவு, சுவிட்சர்லாந்திலுள்ள தியேட்டர்கள், கான்சர்ட் மற்றும் ஒப்பேரா இல்லங்கள் சிவப்பு விளக்குகளை எரியவிட்டன.

கொரோனாவால் கலை மற்றும் கலாச்சாரத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் பணியிழக்கும் அபாயம் உள்ளது தொடர்பாக எச்சரிப்பதற்காகவே இவ்வாறு சிவப்பு விளக்குகள் எரியவிடப்பட்டன.

இந்த சிவப்பு விளக்கு இரவு நிகழ்வில், 800க்கும் அதிகமான தியேட்டர்கள் முதலான அமைப்புகள் பங்கேற்றன.

கலை மற்றும் கலாச்சாரத்துறை நாட்டின் பொருளாதாரத்தில் 10 சதவிகிதத்திற்கு காரணமாக இருப்பதாக தெரிவிக்கும் கலை மற்றும் கலாச்சாரக் கூட்டமைப்புகள், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 275,000 பேருக்கு வேலை வாய்ப்பளிப்பதாக தெரிவித்துள்ளன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்