என்னைக் கொன்று விடுங்கள் என அலறிய நபர்: 13 முறை துப்பாக்கியால் சுட்ட சுவிஸ் பொலிசார்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் மாமிசம் வெட்டும் கத்தியுடன் எதிர்கொண்ட நபரை துப்பாகியால் பல முறை சுட்ட சூரிச் பொலிஸ் அதிகாரி மீது கொலை முயற்சி வழக்குப் பதியப்பட்டுள்ளது.

பெடரல் நீதிமன்றம் குறித்த பொலிஸ் அதிகாரி மீது குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்க உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில்,

33 வயதான அந்த சூரிச் பொலிஸ் அதிகாரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.

விசாரணைக்கு தொடர்புடைய சம்பவம் கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்துள்ளது. சம்பவத்தன்று ரோந்து பணியில் குறித்த பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஒரு குழு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது மாமிசம் வெட்டும் கத்தியுடன் ஒருவர் காரில் செல்வதை பொலிசார் கவனித்துள்ளனர்.

42 வயதான அந்த எத்தியோப்பிய நாட்டவரும் பொலிஸ் ரோந்து வாகனங்களை உடனடியாக கவனித்துள்ளார்.

தொடர்ந்து ரோந்து பொலிசாரின் கோரிக்கையை ஏற்று அந்த எத்தியோப்பிய நாட்டவர் தமது வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

பொலிசார் அவரது வாகனத்தை சோதனையிட முயன்றபோது அந்த நபர் பொலிசார் ஒருவரை தாக்கிவிட்டு, என்னைக் கொன்று விடுங்கள் என அலறியவாறே கையில் மாமிசம் வெட்டும் கத்தியுடன் பொலிசாரை நெருங்கியுள்ளார்.

திடீரென்று சம்பவம் தலைகீழாக மாறுவதை உணர்ந்த இரு பொலிசார் தங்கள் துப்பாக்கிகளை வெளியே எடுத்து அந்த எத்தியோப்பியர் மீது குறி வைத்து சுட்டுள்ளனர்.

மொத்த 13 தோட்டாக்கள் சுடப்பட்டுள்ளது. அதில் 6 தோட்டாக்கள் அந்த நபர் மீது பாய்ந்துள்ளது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவத்தில் சூரிச் பொலிஸ் அதிகாரி மட்டும் 11 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

கையில் கத்தியுடன் நின்ற நபர் தாக்குதலுக்கு தயாராகாத நிலையில் பொலிசார் துப்பாக்கியால் சுட்டது தற்போது நீதிமன்ற விசாரணைக்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த வழக்கில் படுகாயமடைந்த அந்த எத்தியோப்பியர் மீது குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஆனால் 2016 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம் அந்த வழக்குகளை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்