சுவிட்சர்லாந்தில் உயிரைப் பணயம் வைத்து மயிர்க்கூச்செறியும் சாகச நிகழ்ச்சிகளை நடத்திய கலைஞர்கள்: எதற்காக தெரியுமா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

கொரோனாவால் சுற்றுலா உட்பட பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சுவிஸ் அரசு 1,000பேர் வரை ஓரிடத்தில் கூட அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து சுவிஸ் பனிச்சறுக்கு ரிசார்ட்டுகள் திறக்கப்படுகின்றன.

மீண்டும் கேபிள் கார் சேவைகள் தொடங்குகின்றன. மீண்டும் ரிசார்ட்டுகள் திறக்கப்படுவதைக் கொண்டாடுவதற்காகவும், கேளிக்கைத்துறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கௌரவிக்கும் வகையிலும் பல்வேறு கலைஞர்கள் சுவிஸ் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் கூடி கடல் மட்டத்திற்கு மேல் 3,000 அடி உயரத்தில் பல்வேறு மயிர்க்கூச்செறியச் செய்யும் சாகச நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர்.

30 அடி உயரத்தில் எந்த பிடிமானமும் இன்றி pole dance ஒன்றை நிகழ்த்திக் காட்டினார் Pole acrobatic artist Sheila Nicolodi.

மரணச் சக்கரம் என்னும் பயங்கர சக்கரத்தில் நடந்தும் ஓடியும் திகிலூட்டினார் சுவிஸ் acrobatic கலைஞரான Ramon Kathriner.

Freddy Nock என்னும் கலைஞர் கண்களைக் கட்டியபடி கேபிள் மீது பாலன்ஸ் செய்து, பின் அதே கேபிள் மீது சைக்கிளும் ஓட்டினார்.

இப்படி பல்வேறு சாகச நிகழ்ச்சிகளுடன் சுவிட்சர்லாந்தின் பனிச்சறுக்கு ரிசார்ட்டுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

Image Credit: AFP
Image Credit: AP
Image Credit: Reuters
Image Credit: Reuters

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்