நெகிழ்த்தப்படும் கொரோனா கட்டுப்பாடுகள்: சுவிட்சர்லாந்திலிருந்து எந்தெந்த நாடுகளுக்கு பயணிக்கலாம்?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக நெகிழ்த்தப்பட்டு வரும் நிலையில், மக்கள் மனதில் அடுத்து எழுந்துள்ள கேள்வி - கோடை விடுமுறைக்கு எந்த நாட்டுக்கு செல்வது என்பதுதான்!

சுவிட்சர்லாந்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் பலருக்கு எல்லைகள் மூடப்படுவது புது அனுபவம்.

எல்லைகள் மூடப்பட்டதால் குடும்பங்கள் பிரிக்கப்பட்டன, பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது, மட்டுமல்ல, மக்களுடைய கோடை விடுமுறையும் கேள்விக்குறியாகியது.

தற்போது எல்லைகள் திறக்கப்பட்டுவரும் நிலையில், எந்தெந்த நாடுகளுக்கு சுவிஸ் குடிமக்கள் தடையின்றி செல்லலாம், எந்தெந்த நாடுகளில் தனிமைப்படுத்தல் அமுலில் உள்ளது, எந்தெந்த நாடுகளுக்கு செல்ல அனுமதி இல்லை என்பதுபோன்ற விடயங்கள், கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் வெவ்வேறு நிறங்களில் குறிக்கப்பட்டுள்ளன.

என்றாலும், ஒரு நாட்டுக்கு பயணப்படுவதற்கும் முன் அங்குள்ள சூழல் குறித்து விசாரித்து உறுதி செய்து கொள்வது உதவிகரமாக இருக்கும்.

இந்த தகவல் சுற்றுலாப்பயணிகளுக்கு மட்டுமே, பணி அல்லது குடும்பத்தினருடன் இணைதல் போன்ற வேறு காரணங்களுக்காக முறையான ஆவணங்களுடன் செல்வது சாத்தியமே.

எந்தெந்த நாடுகளுக்கு கோடை விடுமுறையை செலவிட செல்லலாம்? ஏற்கனவே சில நாடுகள் எல்லைகளை திறந்துவிட்டன, மற்ற நாடுகள் வரும் நாட்களில் எல்லைகளைத் திறக்க உள்ளன.

பச்சை நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் ஏற்கனவே எல்லைகளை முழுமையாக திறந்துவிட்ட நாடுகள், அங்கு செல்லக் கட்டுப்பாடுகளும் இல்லை. அடர் மஞ்சள் நிறத்திலுள்ள நாடுகளில் அங்குள்ள சட்டப்படி தனிமைப்படுத்தல் இருக்கலாம்.

இள நீலத்திலிருப்பவை, மே அல்லது ஜூன் மாதத்தில் எல்லைகளை திறக்க இருக்கும் நாடுகள்.

அடர் நீலத்திலிருப்பவை, சுவிஸ் குடிமக்களை எப்போது அனுமதிப்பது என்பது குறித்து இன்னமும் தெரிவிக்கவில்லை.

ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோவேஷியா, செக் குடியரசு, பிரான்ஸ், ஜேர்மனி, கிரீஸ், ஹங்கேரி, இத்தாலி, லிதுவேனியா, போர்ச்சுகல், ஸ்லோவேகியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் எல்லைகள் திறந்தாயிற்று.

அயர்லாந்து, ரொமேனியா மற்றும் பிரித்தானியா, எல்லைகள் திறந்தாயிற்று, ஆனால் தனிமைப்படுத்தல் உண்டு.

பெலாரஸ் மற்றும் ஐஸ்லாந்து, கொரோனா பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரிந்தால் மட்டுமே அனுமதி.

பின்லாந்து ஜூலை 14, நார்வே ஆகத்து 20 திகதிகளில் எல்லைகள் திறக்கப்பட உள்ளன. டென்மார்க்கைக் குறித்து தகவல் தெரியவில்லை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்