சொந்த பிள்ளைகளிடம் தந்தையின் கொடுஞ்செயல்: முக்கிய தகவலை வெளியிட்ட சுவிஸ் அதிகாரிகள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் துர்காவ் மண்டலத்தில் தந்தையும் இரு பிஞ்சு குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் பொலிசார் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

துர்காவ் மண்டலத்தில் Eschenz பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஞாயிறன்று 38 வயது நபர் மற்றும் 4, 7 வயதுடைய இரு சிறார்களின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் தற்போது உடற்கூராய்வு முடிக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

துர்காவ் மண்டல பொலிசார் வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்த 38 வயது நபர் முதலில் தமது பிள்ளைகள் இருவரையும் கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்திருக்க வேண்டும்.

அதன் பின்னர் அதே ஆயுதத்தால் தாமும் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம்.

சிறார்கள் உடம்பில் வேறு எந்த காயங்களும் காணப்படவில்லை, அந்த தந்தை கூரானா ஆயுதத்தால் தாக்கப்பட்ட காயங்களாலையே மரணமடைந்துள்ளார்.

குழந்தைகள் இறப்பதற்கான சரியான காரணம் இன்னும் முழுமையாக தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் வேறு எவரேனும் இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆதாரங்கள் இல்லை.

சனிக்கிழமை மாலை அல்லது ஞாயிறு பகல் இச்சம்பவம் நடந்துள்ளதாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், குற்றம் நடந்த இடத்தின் அனைத்து தடயங்களும் இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் தாயாரை இனிமேலும் விசாரிக்க வேண்டும் எனவும் பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அந்த தந்தை தமது பிள்ளைகளை அழைத்துச் செல்வதாக தாயார் தெரிவித்திருந்த நிலையில்,

இது குடும்ப வழக்காக இருக்க வாய்ப்புள்ளதாகவும், ஆனால் பிள்ளைகளை கொலை செய்வதற்கான காரணம் தாயாரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையில் தெரியவரலாம் என கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்