சுவிட்சர்லாந்து செல்வோருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஜூலை 6 முதல் சுவிட்சர்லாந்து செல்பவர்கள், குறிப்பாக அதிக அபாயம் உள்ள நாடுகளிலிருந்து வருபவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சமீபத்தைய நாட்களில் சுவிட்சர்லாந்தில் புதிதாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளதையடுத்து இந்த விதிமுறை அமுல்படுத்தப்பட உள்ளது.

ஜூன் மாத மத்தியிலிருந்து, Schengen மற்றும் Schengen அல்லாத நாடுகளிலிருந்து கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் சுவிட்சர்லாந்துக்குள் நுழையத் தொடங்கியதையடுத்து சுவிட்சர்லாந்தில் புதிதாக கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்று கூறியுள்ளது அரசு.

அதன் காரணமாக, ஜூலை 6 முதல் குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வருவோர் சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்ததும் தங்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என பெடரல் கவுன்சில் தெரிவித்துள்ளது.

அதிக அபாயம் உள்ளவை எனக் கருதப்படும் நாடுகள் ஸ்வீடன், செர்பியா, கொசோவா, அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா ஆகிய நாடுகள் அதிக அபாயம் உள்ள நாடுகள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளன.

இதுபோக, அர்ஜெண்டினா, ஆர்மீனியா, அசர்பைஜான், பஹ்ரைன், பெலாரஸ், பொலிவியா, பிரேசில், காபோ வெர்டே, சிலி, டொமினியன் குடியரசு, ஹோண்டுராஸ், ஈராக், கத்தார், கொலம்பியா, குவைத், மால்டோவா, வடக்கு மாசிடோனியா, ஓமான், பனாமா, பெரு, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள்.

நோய்வாய்ப்பட்டதுபோல் தோன்றும் யாரும், சுவிஸ் செல்லும் பேருந்து, ரயில் அல்லது விமானங்களில் ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்