சுவிஸ் பொலிசாரின் தீவிர கண்காணிப்பு வட்டத்தில் 14 வயது சிறுவன்: கொந்தளிக்கும் தந்தை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் 14 வயது சிறுவனை நீண்ட காலமாக மண்டல பொலிசார் கண்காணித்து வருவது குறித்த சிறுவனின் குடும்பத்தாரை கொந்தளிக்க வைத்துள்ளது.

உள்ளூர் நாளேடு ஒன்றின் கணிப்புன் அடிப்படையில் சிறுவன் மிக புத்திசாலியும் அப்பாவியும் என கூறப்படுகிறது.

இருப்பினும் பெர்ன் பொலிசார், சிறுவன் தொடர்பில் நொடிக்கு நொடி தகவல் சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.

சிறுவன் அப்பாவி, சமூகத்திற்கு தீங்கிழைக்கும் எண்ணம் இல்லாதவன் என பொலிசாருக்கு தெரியவந்தும், சிறுவனின் இடதுசாரி சிந்தனை மற்றும் காவல்துறை மீதான விமர்சன அணுகுமுறை தற்போது விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதுடன் பொலிசாரை கண்காணிக்கவும் தூண்டியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் பெர்ன் மண்டலத்தின் தரவுகள் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தலையிட்டு, பெர்னிஸ் சிறுவன் மீதான இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளை அவர்கள் எவ்வாறு நியாயப்படுத்துகிறார்கள் என விளக்கம் கோரியுள்ளார்.

ஆனால் பொலிசாரிடமிருந்து தகவல் இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், ஒரு மண்டல நிர்வாகம் எவ்வாறு ஒரு சிறுவனையும் அவனது குடும்பத்தையும் வேவு பார்க்கலாம் என சிறுவனின் தந்தை கொந்தளித்துள்ளார்.

இதனிடையே பெர்ன் பொலிசார் சிறுவன் தொடர்பில் கடந்த 2019-ல் சிறார் மற்றும் வயது வந்தோர் பாதுகாப்பு ஆணையத்திடம் மூன்று ஆபத்து அறிக்கைகளை சமர்ப்பித்தது.

இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக குறிப்பிட்ட சிறுவனின் தந்தை கடுமையாக போராடியுள்ளார்.

இறுதியில், சிறார் மற்றும் வயது வந்தோர் பாதுகாப்பு ஆணையத்திற்கு ஆதரவாக செயல்பட தொடங்கினார்.

சிறுவன் தொடர்பில் ஆபத்தான அந்த மூன்று அறிக்கைகள், பொலிசார் ஏன் கண்காணிக்கிறார்கள் உள்ளிட்ட தகவல்களை சுவிஸ் உள்விவகார அமைச்சு வெளியிட மறுத்து வருகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்