மீண்டும் கொரோனா தொற்று மெதுவாக அதிகரித்துவருவது கவலை அளிக்கிறது: சுவிஸ் அதிகாரிகள்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

கடந்த சில வாரங்களாக சுவிட்சர்லாந்தில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவது கவலையை அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று மட்டும் சுவிட்சர்லாந்தில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 134.

தொடர்ந்து மூன்று நாட்களாக சுவிட்சர்லாந்தில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை நூற்றுக்கு அதிகமாகவே உள்ளது.

இதற்கிடையில், மீண்டும் எவ்வளவு வேகமாக கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதை கணிக்க இயலவில்லை என்று கூறியுள்ளார் பொது சுகாதார அலுவலகத்தைச் சேர்ந்த Patrick Mathys.

கொரோனா அதிகரிப்பை ஈடுகட்டுவதற்காக ஜூலை 6 முதல் அமுலுக்கு வரும் நாடு முழுமைக்குமான புதிய தடுப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவையாவன, பொதுப்போக்குவரத்தின்போது மாஸ்க் அணிதல் மற்றும் அபாயகரமான நாடுகள் என முடிவு செய்யப்பட்டுள்ள, அமெரிக்கா மற்றும் பிரேசில் முதலான 29 நாடுகளிலிருந்து வருவோரை 10 நாட்கள் தனிமைப்படுத்துதல் ஆகியவையாகும்.

அத்துடன், ஊரடங்கு விலக்கப்பட்ட பின்னர் கடைப்பிடிக்கவேண்டிய கட்டுப்பாடுகளை கவனிக்கும் பொறுப்பு, அந்தந்த மாகாணங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்