தனிமைப்படுத்தல் பட்டியலிலிருக்கும் 28 நாடுகளில் எந்த நாட்டுக்கேனும் யாராவது சென்றால், அவர்கள் சுவிட்சர்லாந்து திரும்பியபின் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என தொழிலாளர் துறை சட்டத்தரணி ஒருவர் எச்சரித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் பட்டியலிலிருக்கும் 28 நாடுகளில் ரஷ்யா, பிரேசில் மற்றும் அமெரிக்காவும் அடக்கம்.
இந்த நாடுகள் எதற்காவது யாராவது சென்று திரும்பினால், அவர்கள் தங்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.
அத்துடன் அப்படி தனிமைப்படுத்திக்கொள்பவர்களுக்கு தனிமைப்படுத்தல் காலகட்டத்திற்கு ஊதியம் வழங்காமலிருப்பது அந்தந்த நிறுவனத்தின் உரிமை என Boris Etta என்ற தொழிலாளர் துறை சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் தொழில் ரீதியாக அந்த நாடுகளுக்கு செல்வோருக்கு அவரவர் பணி புரியும் நிறுவனங்கள் தனிமைப்படுத்தல் காலத்துக்கும் சேர்த்து ஊதியம் வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
இதில் சோகம் என்னவென்றால், யாராவது அப்படி தனிமைப்படுத்தல் பட்டியலிலிருக்கும் நாடுகளுக்கு சென்று திரும்பினால், அவரது குடும்பத்தார் அனைவரும் தனிமைப்படுத்தலுக்குட்படவேண்டும் என்பதுதான்.