பற்றியெரியும் காருக்குள் சிக்கிய குழந்தை... காப்பாற்ற முயன்ற தந்தைக்கும் நேர்ந்துள்ள சோகம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
632Shares

தீப்பற்றிய காருக்குள் சிக்கிய ஒரு வயது மகளை காப்பாற்ற முயன்ற தந்தை ஒருவரும் பலத்த காயமடைந்த சம்பவம் சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் Nidwalden மாகாணத்தில் கார் ஒன்று திடீரென தீப்பறியது. காரில் ஒரு தந்தையும் அவரது மூன்று வயது மகன் மற்றும் ஒரு வயது மகளும் இருந்துள்ளனர்.

Emmettenஇலுள்ள பண்ணை ஒன்றுக்கு குடும்பமாக அவர்கள் சுற்றுலா செல்லும்போது இந்த அசம்பாவித சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திடீரென கார் தீப்பற்றவும், காரை அந்த தந்தை நிறுத்த, அந்த மூன்று வயது சிறுவன் சமயோகிதமாக காரிலிருந்து இறங்கி தப்பி விட்டான்.

மகள் காருக்குள் சிக்கிக்கொள்ள, அந்த தந்தை எரியும் காருக்குள்ளிருந்து மகளை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

தீயில் சிக்கிய மகளுக்கும், அவளை காப்பாற்ற முயன்ற தந்தைக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

அந்த ஒரு வயது சிறுமி, ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கார் எதனால் திடீரென தீப்பற்றியது என்பதை அறிவதற்காக அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவங்கியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்