உலகில் கொரோனா அச்சுறுத்தல் மிகுந்த 29 நாடுகளின் பட்டியலை சுவிஸ் நிர்வாகம் ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில், தற்போது 15 நாடுகளின் புதிய பட்டியல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இந்த நாடுகளில் ஒன்றிலிருந்து ஒருவர் சுவிட்சர்லாந்திற்குத் திரும்பினால், அவர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்குள் தங்கள் வசிக்கும் மண்டலத்தில் உள்ள அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
மட்டுமின்றி அந்த பயணிகள் ஒரு பத்து நாள் தனிமைப்படுத்தலை எதிர்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டனர்.
ஆனால் அந்த பட்டியலானது ஜூலை மாத துவக்கத்தில் உருவாக்கப்பட்டதாகும். இடைப்பட்ட காலத்தில் குறித்த பட்டியலில் உள்ள பல நாடுகளில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுவிஸ் நிர்வாகம் 15 நாடுகள் கொண்ட புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த நாடுகளில் இருந்து திருபுபவர்களும் தங்கள் மண்டல நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
- Equatorial Guinea
- Bosnia and Herzegovina
- Costa Rica
- Ecuador
- Guatemala
- Virgin Islands (USA)
- Kazakhstan
- Kyrgyzstan
- Luxembourg
- Puerto Rico
- Maldives
- Mexico
- Montenegro
- Seychelles
- United Arab Emirates
இதனிடையே, நள்ளிரவு முதல், ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே மூன்றாவது நாடுகளில் இருந்து குறிப்பிட்ட நாடுகளுக்கு கட்டுப்பாடற்ற நுழைவை அனுமதிக்க முடிவு செய்துள்ளது.
அவை, அவுஸ்திரேலியா, ஜார்ஜியா, கனடா, நியூசிலாந்து, தாய்லாந்து, துனிசியா மற்றும் உருகுவே.