கொரோனாவைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் பரவும் மற்றொரு நோய்: சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
2036Shares

இப்போதுதான் கொரோனா வந்து மக்களை ஒரு வழி செய்துவிட்ட நிலையில், சுவிட்சர்லாந்தில் மற்றொரு நோய் பரவத் தொடங்கியுள்ளது.

உன்னிகள் (tick) எனப்படும் சிறு பூச்சிகள் கடிப்பதால் ஏற்படும் என்செபலைட்டிஸ் என்னும் மூளை அழற்சி நோய் சுவிட்சர்லாந்தில் பெருகி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரை 215 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்ற ஆண்டை விட இது இருமடங்குக்கும் அதிகமாகும்.

அதிலும், 124 பேர் கடந்த நான்கு வாரங்களில் மட்டும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெப்பமான சீதோஷ்ணமும் சமூக விலகல் விதிகளும் மக்களை மரங்களடர்ந்த மற்றும் புல்வெளிகள் பக்கம் திருப்பியுள்ளதைத் தொடர்ந்து, அங்கு வாழும் இந்த உன்னிகள் மக்களை கடிப்பதால் இந்த நோய் அதிகம் பரவுவதாக அதிகாரிகள் நம்புகிறார்கள்

Lyme disease அல்லது என்செபலைட்டிஸ் எனப்படும் இந்த பயங்கர நோய் மூளையை பாதிப்பதோடு, அதன் தாக்கம் நரம்பு மண்டலத்தில் நீண்ட காலம் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நோய்க்கு மருந்து இல்லையென்றாலும், அதற்கு தடுப்பூசி இருக்கிறாது. அபாயம் உள்ள இடங்களில் வசிப்போர், தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பான உடை அணிந்து பயணிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்