புகலிடக்கோரிக்கை நிராகரிப்பு: நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இளைஞரை வெளியேற்றும் சுவிஸ் நிர்வாகம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
3214Shares

சுவிட்சர்லாந்தில் பயிற்சி செவிலியர் ஒருவர் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், வெளியேற்றப்படும் கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளார்.

எத்தியோப்பியாவைச் சேர்ந்த 28 வயதான ஃபவாத் ஹுசைன் என்பவரே நீண்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட உள்ளார்.

Thun பகுதியில் உள்ள முதியோர் காப்பகத்தில் பயிற்சி செவிலியராக இணைந்துள்ள ஃபவாத், அங்குள்ள முதியவர்கள் மற்றும் ஊழியர்களிடம் மிகவும் அன்பாக இதுவரை நடந்து கொண்டுள்ளார்.

தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் பயிற்சி செவிலியர்களை உதவிக்கு கிடைப்பது அரிதாக உள்ள நிலையில், ஃபவாத் வெளியேற்றப்படுவது, குறித்த முதியோர் இல்லத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் என அங்கு பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அவரது பயிற்சி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் எங்களுடன் அவர் பணியாற்றுவது உறுதியாக திட்டமிடப்பட்டுள்ளது என்கிறார் அந்த முதியோர் இல்ல நிர்வாகி.

கடந்த 2019 மார்ச் மாதம் முதல், புகலிடக்கோரிக்கை தொடர்பான நடவடிக்கைகளை 140 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

ஆனால் ஃபவாத் 2015 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்துக்குள் புகலிடக்கோரிக்கையுடன் வந்துள்ளார்.

தற்போது நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், அவர் தனக்கான ஒரு வாழ்க்கை சூழலை உருவாக்கியுள்ள தருணத்தில், அவரது புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, ஜூலை 30 ஆம் திகதி இறுதி நாள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்