சுவிஸில் தடை செய்யப்பட்ட கருவியால் ரோந்து பொலிசாரை தாக்கிய இளைஞர்: பார்வை பறிபோன பரிதாபம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் இரவு ரோந்தில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி மீது இளைஞர் ஒருவர் லேசர் கருவியால் தாக்கியதால், அந்த பொலிஸ் அதிகாரிக்கு பார்வை பறிபோயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக 20 வயது இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் Häringstrasse பகுதியில் குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

தடை செய்யப்பட்ட லேசர் துப்பாக்கியை பயன்படுத்தி, அந்த இளைஞர் ரோந்தில் ஈடுபட்டிருந்த அதிகாரியின் கண்ணில் தாக்கியுள்ளான்.

இதில் அந்த அதிகாரி பார்வையை இழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். ஆனால் இந்த தாக்குதலில் பொலிஸ் அதிகாரிக்கு நிரந்தர கண் பாதிப்பு ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்த சம்பவம் சனிக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் மாவட்டம் 1 இல் பொலிஸ் ரோந்து பரிசோதனையில் நிகழ்ந்ததாக நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

ஒரு வீட்டின் முன், மற்ற இரண்டு இளைஞர்களுடன் அங்கு இருந்த அந்த இளைஞர் திடீரென்று லேசர் துப்பாக்கியை பயன்படுத்தி காவல்துறை அதிகாரியை குறிவைத்துள்ளார்.

இதில் ரோந்து வாகனத்தில் இருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளில் ஒருவரது பார்வை பறிபோயுள்ளது.

தொடர்ந்து சம்பவயிடத்திலேயே அந்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும், பதிக்கப்பட்ட அதிகாரியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்